|
யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள் [Paper Pack (145x225mm)] Rs.70.00
|
| by geetha :) |
Date Added: Tuesday 30 March, 2010 |
 |
 |
 |
 |
 |
யாரோ ஒருத்தியின் டைரி குறிப்புகள் - மிகவும் பிடித்தது.
கதைகளில் நடையழகும், கடைசி பத்திகளில் கையாளப்படும் வார்த்தைச் அழகும், கருத்துச் செறிவும் மிகவும் ஈர்த்தது. அனைத்து கதைகளின் முடிவுறு வண்ணமும் நிச்சயம் பாராட்டுக்குரியது. கவிதை போல் உணரவைக்கும் கதைகள் அமையப்பெற்றது, புத்தகத்தின் சிறப்பம்சம்.
யாரோ ஒருத்தியின் டைரி குறிப்புகள் , ப்ரியாக்குட்டி நான்காம் வகுப்பு ஏ பிரிவு,
ஆலம் , சம்யுக்தை போன்ற கதைகள் என்றும் மனதில் நிறைந்து நிற்கும் தன்மை பெற்றது . சமுக அவலம், காதல், பால்ய கால நினைவுகள், பிரிவு, அன்பு, கிராமப்புற மக்களின் (பெண்களின்) வாழ்வு நிலை என்று பல கலவையான (17 கதைகளாக) எண்ணங்கள் கொண்டு, அனைத்தையும் உணர்ந்து ரசிக்கவைக்கிறது.
Hats Off for the "Wonderful touches" at the End of the Stories.
Rating: [5 of 5 Stars!] |
 |
|
 |
 |
 |
 |
|
|
|
|
|
|